fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்பு தேவை : போப்பாண்டவர்

ITN News Editor
By ITN News Editor மே 5, 2020 13:09

கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்க, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு தேவையென போப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து அனைவரும் மீள கடவுளை வேண்டி, அனைத்து மதத்தினரும் எதிர்வரும் 14ம் திகதி பிரார்த்தனை, நோன்பு மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபட வேண்டுமென போப்பாண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாண்டு இறுதிக்குள், ‘கொரோனா’ வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றால் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் பாரிய அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் மிக விரைவில், பாதுகாப்புடன், இயல்பு நிலைக்கு திரும்புவோமென அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 5, 2020 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க