யாழ். உடுவில் பகுதி வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணை
Related Articles
யாழ். உடுவில் – அம்பலவானர் வீதியில் வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வயோதிப தம்பதினர் வாழ்ந்த வீட்டினுள் நுளைந்த கொள்ளையர்கள் அவர்களை தாக்கி 15 பவுண் தங்க நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்ப தலைவர் தெல்லிப்பலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த தம்பதினரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்துவரும் நிலையில், அவர்கள் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரனைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர.