fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி அணிசேரா நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்பு (VIDEO)

ITN News Editor
By ITN News Editor மே 5, 2020 12:48

கொவிட் 9 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தயாரென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அணிசேரா நாடுகளின் தலைவர்களுடன் ஒன்லைன் ஊடாக இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடும் வகையில், குறித்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததது.

அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் 19 நாடுகளின் ஜனாதிபதிகள், உப ஜனாதிபதியொருவர், பிரதமர்கள் 6 பேர் மற்றும் பிரதி பிரதமர் ஒருவர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் 8 பேர் கலந்துக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது. கொவிட் 19 இற்கு எதிரான ஒன்றினைவு எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒவ்வொரு தரப்பினரும் தமது கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

 

ITN News Editor
By ITN News Editor மே 5, 2020 12:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க