கடந்துள்ள 24 மணித்தியாலங்களில் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட 558 பேர் கைது
Related Articles
கடந்துள்ள 24 மணித்தியாலங்களில் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட 558 பேர் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், 139 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இன்றைய தினம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய செயற்படுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளி, பொது போக்குவரத்தின் போது அவதானத்துடன் செயற்படல், தொழில் இடங்களில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் அவசியமென பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.