தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 5 ஆயிரத்து 42 பேர் வீடு திரும்பல்
Related Articles
வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சை பெற்றுவந்த 194 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 553 பேர் மாத்திரம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக இராணுவ தளபதி தெரிவித்தார். இதேவேளை, தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 5 ஆயிரத்து 42 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தினம் மேலும் 47 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 208 பேர் உள்ளடங்களாக 261 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கென அனுப்பி வைக்கப்பட்டனர்.