fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமரின் அறிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 3, 2020 20:01

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமும், அரசாங்க இயந்திரமும் கொரோனாவை ஒழிப்பதில் வெற்றிபெற்றுள்ளமை மக்கள் அடைந்துள்ள நன்மையின் மூலம் தெரியவந்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மற்றும் அனைத்து அரசாங்க கட்டமைப்பும் கொரோனா ஒழிப்பு திட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. மக்கள் அடைந்துள்ள நன்மைகள் மூலம் இதனை உணர்ந்துகொள்ளலாம். குறித்த தேசிய அனர்;த்தம் மற்றும் தேசிய பேரிடருக்கு மத்தியில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டுமெனவும் ஏப்ரல் 5 ம் திகதி பின்னர் பழை பாராளுமன்றத்தின் அனுமதியின்றி அரசாங்கத்திற்கு கொரோனா ஒழிப்பு உள்ளிட்ட அரச பணிகளை முன்னெடுப்பதற்காக நிதி ஒதுக்குவதற்கான அதிகாரமில்லையெனவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டினால் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினரின் குடியுரிமையை இல்லாமற் போகலாமெனவும் சொத்துக்களை அரசுடமைக்காலாமெனவும் எதிர்க்கட்சி முன்வைத்துவரும் தர்க்கங்களை அறியக்கூடியதாக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோன நோயாளி எவரும் இனங்காணப்படாத நிலையிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அவ்வாறு கலைக்கப்பட்டு ஒன்றரை வாரத்திற்கு பின்னர் நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து தேர்தல் ஆணைக்குழுவினால் ஜூன் 20 ம் திகதி வரை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. சுகாதார துறையின் பரிந்துரையின் பேரில் அனேகமாக எதுவும் ஒத்திவைக்கப்படலாமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கொரோனா ஒழிப்பு செயல்திட்டங்கள் ஏனையநாடுகளை விட வெற்றியடைந்துள்ள நிலையில் தேர்தல் நடத்தப்பட்டால் எதிர்க்கட்சிக்கு பாதகமாக அமையுமென்பதால் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டி அரசாங்கத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை தடுப்பதே எதிர்க்கட்சியின் நோக்கமாகும். கொரோனா ஒழிப்பு செயற்திட்டத்தை குழப்புவதன் மூலம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தின் நற்பெயரை கெடுப்பதே எதிர்க்கட்சியின் நோக்கமென பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 3, 2020 20:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க