fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மஹர சிறைச்சாலையில் தப்பியோட முயன்ற கைதியொருவர் மரணம்

ITN News Editor
By ITN News Editor மே 3, 2020 20:06

மஹர சிறைச்சாலை கைதிகள் சிலர் தப்பியோட முயற்சிக்கும் போது ஏற்பட்ட காயம் காரணமாக கைதியொருவர் உயிரிழந்தார். இவர் போதைப் பொருள் பயன்பாடு காரணமாக கடந்த 10 தினங்களுக்கு முன்னர் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2.30 க்கும் 3 மணிக்கும் இடையில் 7 கைதிகள் கயிறு மற்றும் போர்வைகளின் உதவியுடன் சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயற்சித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் கைதிகளால் தப்ப முடியவில்லை. ஆனால் தப்பிச் செல்ல முயன்றபோது கைதியொருவர் காயமடைந்தார். அவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 3, 2020 20:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo