fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளை முதல் எதிர்வரும் 8ம் திகதி வரை தேசிய வெசாக் வாரம்

ITN News Editor
By ITN News Editor மே 3, 2020 13:06

நாளைய தினம் வெசாக் வாரம் ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. நாளைய முதல் எதிர்வரும் 8ம் திகதி வரை தேசிய வெசாக் வாரமாகப் அமுலில் இருக்குமென புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. வெசாக் பௌர்ணமி தினமான எதிர்வரும் 7 ஆம் திகதி விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இக்காலப்பகுதியில் மதக் கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடக்குமாறு பொதுமக்களிடம், புத்தசாசன அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.. அத்துடன், பௌத்த மக்கள் வீட்டிலிருந்தவாறு நிகழ்வுகளில் பங்குபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இம்முறை தேசிய வெசாக் நிகழ்வு ஹொரணை – கொணபொல, ஒலபோடுவ ரஜ மஹா விகாரையை கேந்திரமாக கொண்டு இடம்பெறவுள்ளது. வெசாக் வாரத்தை முன்னிட்டு விசேட முத்திரைகள் நான்கு வெளியிடப்படவுள்ளதாகவும் புத்தசாசன அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 3, 2020 13:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க