fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

5 ஆயிரம் ரூபா நிவாரணத்தை 2ம் சுற்றாக மீள வழங்க கோரிக்கை

ITN News Editor
By ITN News Editor மே 2, 2020 12:56

கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பொருளாதார ரீதியாக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள குறைந்த வருமானங்களை பெறுபவர்களுக்கான 5 ஆயிரம் ரூபா நிவாரணத்தை 2ம் சுற்றாக மீள வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ளது. இதன் நன்மைகளை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு எரிபொருள் நிவாரணம் கிடைக்குமாயின், அதனை தனியார் நிறுவனங்கள் மாத்திரம் பெறுவதை தவிர்த்து நேரடியாக பொது மக்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடைக்கும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 2, 2020 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க