fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வடகொரிய தலைவர்..

ITN News Editor
By ITN News Editor மே 2, 2020 12:51

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வடகொரிய தலைவர்..

வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் குறித்தான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களின் பின்னர் மீண்டும் அவர் பொது நிகழ்வொன்றில் பங்கேற்றுள்ளதை அந்நாட்டு அரச ஊடகம் ஒளிபரப்பு செய்துள்ளது. உர தொழிற்ச்சாலையொன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்த கிம் ஜொங் உன், அதனை பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான காணொளி வடகொரிய அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 12ம் திகதிக்கு பின்னர் கிம் ஜொங் உன், எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை. அவரின் இருப்பு குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் வடகொரிய தலைவர் கடும் சுகயீனமடைந்திருக்கலாம் அல்லது மரணமடைந்திருக்கலாமென சர்வதேச ஊடங்கள் சில சந்தேகங்களை வெளியிட்டிருந்தன.

கிம் ஜொங் உன்னின் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாக வடகொரிய முன்னாள் அரச பிரதிநிதியொருவர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். எனினும் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் அங்குரார்ப்பண நிகழ்வொன்றில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 2, 2020 12:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo