fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்

ITN News Editor
By ITN News Editor மே 2, 2020 12:43

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறானவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதே இதற்கு காரணமாகும். தொடர்மாடி குடியிருப்புக்கள் மற்றும் தோட்டப்பகுதி மக்கள் இது தொடர்பில் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் ஒரே சிந்தனையுடன் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் வைரஸ் பரவல் குறித்து அவதானத்துடன் இருப்பது குறைவாகும். இதனால் அவ்வாறனவர்கள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கும் அறிவிக்கமுடியுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 2, 2020 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo