கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மே 11 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் மே மாதம் 6 ஆம் திகதி வரையில் முன்னரைப் போன்று இரவு 8 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு மீண்டும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாவட்டங்களில் மே மாதம் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 11 ஆம் திகதி காலை 5 மணி வரையில் தொடர்ந்து நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.