fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவிலிருந்து இலங்கை மாணவர்கள் 125 பேர் இன்று நாடு திரும்பல்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 13:12

இந்தியாவிலிருந்து இலங்கை மாணவர்கள் 125 பேர் இன்று நாடு திரும்பவுள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்கென ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானமொன்று முற்பகல் 10.15 மணியளவில் கொல்கத்தா நகர் நோக்கி பயணித்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். மாலை 05.15 மணியளவில் மாணவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். அதற்கமைய சார்க் வலயநாடுகளிலுள்ள இலங்கை மாணவர்களை அழைத்துவரும் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக விமான நிலைய தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்திரசிறி தெரிவித்தார். கடந்த 22 ம் திகதி முதல் சார்க் வலய நாடுகளிலிருந்து மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. ஆயிரத்து 100 பேர் இதுவரை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக விமான நிலைய தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்திரசிறி தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 13:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க