fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாலைத்தீவிலும் முதலாவது கொரொனா மரணம் பதிவு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 13:16

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 10 லட்சத்துக்கு மேற்பட்டோர்; குணமடைந்துள்ளனர். 32 லட்சத்து 27 ஆயிரத்து 470 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 90 ஆயிரத்து 786 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 814 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வைரஸ் தாக்குதலுக்கு 2 லட்சத்து 28 ஆயிரத்து 270 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மாலைத்தீவிலும் முதலாவது கொரொனா மரணம் பதிவாகியுள்ளது. 83 வயதான பெண்ணொருவர் நோய் தொற்றுக்குள்ளான நிலையில், உயிரிழந்துள்ளார். மாலைத்தீவில் 278 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 17 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க