fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு உயர்ந்த ஒத்துழைப்பு : சீனா

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 13:04

கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு உயர்ந்த ஒத்துழைப்பை வழங்க தயாரென சீனா தெரிவித்துள்ளது. இலங்கையின் சீன பதில் தூதுவருக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடைமுறைகளுக்கு, சீன பதில் தூதுவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ள ஒத்துழைப்புகளை வழங்க சீனா எதிர்பார்த்துள்ளது. சீனாவின் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் அந்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஒத்துழைப்பும் இலங்கைக்கு கிடைக்குமெனவும் சீன பதில் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 13:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க