fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் தரவுகள் களவாடப்படும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கை தொடர்பில் தகவல்கள்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 12:59

கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் தரவுகள் களவாடப்படும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தளத்தினூடாக பதிவுசெய்யப்படும் பொருட்கள் வீடுகளுக்கே தருவிக்கப்படுமென தெரிவித்து, குறித்த சட்டவிரோத வர்த்தக செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கணணி அவசர நடவடிக்கை பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிது மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கே பொருள் விநியோகம் மேற்கொள்வதற்கென போலியாக தயாரிக்கப்பட்ட பல்வேறு இணையத்தள பக்கங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. பொதுமக்கள் தமக்கு தேவையான பொருட்களை தெரிவுசெய்து, கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் இலக்கங்களை வழங்கியதையடுத்து சில சந்தர்ப்பங்களில் கொடுக்கல் வாங்கல் இடம்பெறும். எனினும் ஒரு சில போலி நபர்கள் முன்னெடுக்கும் இணையத்தள செயற்பாடுகளில் கொடுக்கல் வாங்கல் இடம்பெறாது. போலி நபர்களால் களவாடப்படும் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் தரவுகளை பயன்படுத்தி பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெறுவதாக கணணி அவசர நடவடிக்கை பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிது மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை தவிர்ப்பதற்காக அனைவரும் அறிந்த இணையத்தளங்களினூடாக மாத்திரம் பொருட்கொள்வனவை மேற்கொள்ள வேண்டும். இதேவேளை இணையத்தள வங்கி சேவையை மேற்கொள்வோர், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். உதாரணமாக one time password முறையை செயற்படுத்திக்கொள்வது சிறந்ததாகும்.

இதேவேளை எவரேனும் சந்தேகத்திற்கிடமாக இணையத்தளத்திற்கு தமது தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக எண்ணினால் உடனடியாக வங்கியுடன் தொடர்புகொண்டு, தமது கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் சேவையை இரத்து செயற்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கணணி அவசர செயற்பாட்டு பிரிவின், தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரவிது மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 12:59

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33