fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊரடங்கு காலப்பகுதியில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 12:45

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 544 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் இருந்து இதுவரை 42 ஆயிரத்த 101 பேர் கைதாகியுள்ளனர். அத்துடன் 10 ஆயிரத்து 860 வாகனங்கள் பொலிஸாரின் காட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில், தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஊரடங்கு காலப்பகுதியில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கண்டறிவதற்கான விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சட்டத்தை மீறி செயற்பாடுவோர்களுக்கு எதிராக உயர்ந்தபட்ச நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 12:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க