fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிதி 878 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 12:51

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிதி 878 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் 6 மில்லியனுக்கும் அதிக தொகை நன்கொடையாக கிடைக்கப்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடைகள், நேரடி வைப்புக்கள் என்பவற்றின் ஊடாக கொவிட்19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்பு தொகை அதிகரித்துள்ளது.

இலங்கை வங்கி நிறுவனக் கிளை ஊடாக 85737373 என்ற இலக்கத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை மேற்கொள்ளமுடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் நன்கொடைகள், வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும்.

காசோலை, டெலிகிராப் ஊடாகவும் நிதியினை வைப்பிலிட முடியும். 0112 354 479 அல்லது 0112 354 354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகத்தை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 12:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க