fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்வு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 11:49

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்வு..

நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு உறுதிசெய்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 30 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏனைய 7 பேர் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்பதுடன் ஓருவர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்டவரெனவும்; அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இதுவரை 136 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய தினத்தில் மாத்திரம் 8 பேர் பூரண குணமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நோய் தொற்றினால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 506 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. வைத்தியசாலைகளில்; கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 250 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 11:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க