தற்போதைய சூழலில் சேவைக்கு சமூகமளிக்கும் இ.போ.சபை சாராதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு மேலதிக கொடுப்பனவு
Related Articles
பிரதேச மட்டத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் யோசனையொன்று இன்று அமைச்சரவையில் சமர்பிக்கப்படுமென அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். கொரொனா வைரஸ் பரவும் சூழலில் கடமைகளில் ஈடுப்பட்டுள்ள கிராம சேவகர்களில் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் இதன்மூலம் யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போதய சூழலில் கடமையாற்றும் மற்றும் சேவைக்கு சமூகமளிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாராதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்கவும் அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தனியார் பஸ் உரிமையாளர்களும் சேவையில் ஈடுபடுவது குறித்து அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர். இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பல இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.