fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி இடம்பெறும்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 29, 2020 12:57

5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை திட்டமிட்டதற்கு அமைய இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லையென ஆய்வு மற்றும் அபிவிருத்தி ஆணையாளர் கயத்ரி அபேகுணசேகர தெரிவித்துள்ளார். இம்முறை 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை, புதிய பாட பரிந்துரைக்கமைய இடம்பெறும். பகுதி 1 வினாபத்திரம் வரைபில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறமாட்டாது. எனினும் பகுதி 2 வினாபத்திரத்தில் மாத்திரம் சிறிய மாற்றம் இடம்பெறுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த வினாபத்திரத்தில் சுற்றாடலை மையமாக கொண்டு வழங்கப்படும் வினாக்களுக்கு மூன்று தெரிவு விடைகள் மாத்திரம் இம்முறை பரீட்சையில் வழங்கப்படும். இதுவரை காலமும் குறித்த வினாக்களுக்கென 4 விடை தெரிவுகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகின. புதிய பரிந்துரைகளின் கீழ் குறித்த பெறுபேறுகள் சிறந்த உயர்வு மட்டத்தை காண்பிப்பதாக ஆய்வு மற்றும் அபிவிருத்தி ஆணையாளர் கயத்ரி அபேபுணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசிலனை தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பித்ததன் பின்னர் அறிவிக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சார்த்திகள் பெறுபேறு மீள் பரீசிலனை விண்ணப்பங்களை அதிபர்கள் ஊடாக முன்வைப்பதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு 2 வாரங்கள் வரை விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படுமென பல்கலைக்கழக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 29, 2020 12:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க