fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச பிரிவின் செயற்பாடுகளை சுகாதார தரத்திற்கு அமைய ஆரம்பிக்க திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 26, 2020 12:55

அரச பிரிவின் செயற்பாடுகளை சுகாதார தரத்திற்கு அமைய ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒன்லைன் முறையின் ஊடாக முன்னெடுக்கக்கூடிய சகல நிறுவன செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில் ஒன்லைன் முறையின் ஊடாக பணிகளை முன்னெடுப்பதே தொடர்ந்தும் நீடிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

எனினும் சுகாதார ஆலோசனைகளுடன் நிறுவன செயற்பாடுகளை ஆரம்பிக்கவேண்டியது அவசியமானதாகும். இல்லாவிடில் எதிர் காலத்தில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டு முறையான சுகாதார ஆலோசணைகளைக் கொண்டு அரச பிரிவின் செயற்பாடுகளை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில், சகல அரச நிறுவனங்களிலும் சேவைக்கு சமூகம் அளிக்காத அதிகாரிகள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 26, 2020 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க