கிளினிக் மற்றும் சாதாரண மருத்துவ சிகிச்சை செயற்பாடுகள் வழமைக்கு..
Related Articles
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முடக்கப்பட்டிருந்த கிளினிக் மற்றும் சாதாரண மருத்துவ சிகிச்சை செயற்பாடுகள் வழமைக்கு திரும்புமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுநரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய செயற்பாடுகளை ஆரம்பிப்பது குறித்து வைத்தியசாலைகளின் பிரதானிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்தியநிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.