கொவிட் 19 தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. நோய் தொற்றினால் 9 இலட்சத்து 25 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. எனினும், அமெரிக்காவில் முடக்கப்பட்டிருந்த சில பகுதிகள் மக்கள் பாவனைக்கென திறக்கப்பட்டுள்ளது. மக்கள் தம்மை பாதுகாத்து கொள்வதற்கு சுயமாக முன்வரவேண்டுமென அந்நாட்டு அரசாங்கம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒரு சில மாநிலங்களில் அத்தியாவசியமற்ற சேவை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள.
இதேவேளை, கடந்த ஒருமாதத்திற்கு மேலாக அமெரிக்காவின் பல மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்றினால் நியூயோர்க் நகரமே அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. நியூயோர்க்கில் கொவிட் 19 தொற்pறனால் இதுவரை 15 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.