இலங்கையில், பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 52 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 35 பேர் கடற்படை வீரர்கள் எனவும் 11 பேர் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். மேலும் 5 பேர் விடுமுறைக்காக வீடு திரும்பிய கடற்படை வீரர்கள் என அவர் தெரிவித்தார். அத்துடன் மருதானையைச் சேர்ந்த கர்ப்பிணி தாய்யொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர் டி சொய்ஷா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியள்ளமை தெரியவந்ததது. இதனைதவிர தவிர மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 304 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார குறிப்பிட்டுள்ளது. வைத்தியசாலைகளில்; கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 183 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/04/2020-04-24-1.png”]