விமானப்படை பொறியியலாளர்கள் வடிவமைத்த அம்பியூலன்ஸ்..
Related Articles
விமானப்படை பொறியியலாளர்கள் இணைந்து வை 12 ரக விமானம் ஒன்றை விமான அம்பியூலன்ஸாக வடிவமைத்துள்ளனர். கொவிட் 19 வைரஸ் ஒழிப்பு செயல்பாட்டு நடவடிக்கையின் போது நோயாளிகளை கொண்டு செல்வதற்காக குறித்த விமான அம்பியூலன்ஸை பயன்படுத்த முடியும்.
ரத்மலானை விமானப்படை முகாமில் 8 வது படை பிரிவின் பொறியியலாளர்களினால் குறித்த வை 12 விமானம் அம்பியூலன்ஸாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விசேடமாக தயாரிக்கப்பட்ட வைத்திய உபகரணங்கள் குறித்த அம்பியூலன்ஸில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று ஏற்பட்டு ஆபத்தான கட்டத்திற்கு செல்லும் நோயாளர்களுக்கு பயன்படுத்த கூடிய வகையில் குறித்த வைத்திய உபகரணங்கள் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். விமானத்தில் நோயாளர்களை தனிமைப்படுத்தி கொண்டு செல்வதற்கான இடவசதி கூடுதலாக காணப்படுகின்றது. இந்நிலைலயில் இரத்மலானை விமானப்படை முகாமில் விண்வெளிதுறை பொறியியலாளர்களின் உதவி பிரிவின் ஊடாக விசேட கட்டில் ஒன்றும் விமான அம்பியூலன்ஸிற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விமான அம்பியூலன்ஸ் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.