fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொதுப் போக்குவரத்து சேவையானது அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு மாத்திரமே : அமைச்சர் மஹிந்த அமரவீர

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 23, 2020 20:54

தற்போது பொது போக்குவரத்து சேவையானது அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தைப் போன்று மக்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு உண்டு அதனால் பொது போக்குவரத்து சேவையினை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்யவேண்டாமென இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் வலியுறுத்தினார். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதாரம் பாதுகாப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைக்காக மாத்திரமே போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் நிறுவன தலைவர்கள் ஊடாக ரயில்வே திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் மாத்திரமே ரயிலில் பயணிக்க முடியும். இந்நிலையில் பொது போக்குவரத்து சேவையினை முறைகேடாக பயன்படுத்துவோர் தொடர்பில் முழுநாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பொலிசாருக்கு தகவல் வழங்குமாறும் அமைச்சர் குறித்த ஊடக சந்திப்பின் போது கோரிக்கை விடுத்திருந்தார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 23, 2020 20:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க