fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உயர்ந்தபட்ச சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 23, 2020 12:34

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உயர்ந்தபட்ச சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய ஐயாயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களில் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள குடும்பங்கள், தனியார் பிரிவில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிவோர், மற்றும் ஏப்ரல் மாதம் ஊதியம் கிடைக்கப்பெறாத ஐயாயிரத்திற்கும் குறைந்த ஊதியம் பெறுவோருக்கு ஐயாயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது. ஐயாயிரத்திற்கும் குறைந்த மாதாந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் பெருந்தோட்டத்துறையில், தற்காலிக ஊதியதாரர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்புத்தொகை 822 மில்லியனாக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் 37 மில்லியன் அன்பளிப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 23, 2020 12:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க