fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பேலியகொட மத்திய மீன் சந்தையில் பணியாற்றும் நபர்கள் இன்று PCR பரிசோதனைக்கு..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 22, 2020 13:00

பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலையத்தின் சில்லறை விற்பனை செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன்வள மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. சில்லறை விலைக்கு மீன்களை கொள்வனவு செய்வதற்காக பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலையத்திற்கு வர வேண்டாம் என மீன்வள மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு நுகர்வோரை கேட்டுள்ளது.

பிலியந்தலையைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் நேற்று முன்தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் மீன் கொள்வனவு செய்வதற்காக சந்தைக்கு வருகை தந்திருந்தமையால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பேலியகொட வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமஆராச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில், சந்தையில் பணியாற்றும் நபர்கள் இன்றையதினம் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 22, 2020 13:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo