இலங்கை மாணவர்களை அழைத்துவரும் வேலைத்திட்டத்தின் முதலாவது குழு இன்று நாடுதிரும்பல்..
Related Articles
வெளிநாடுகளில் உள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது குழு இன்று பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளது. அங்கு, கல்வி பயிலும் மாணவர்களை இவ்வாறு அழைத்துவரப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். கல்வி பயின்று வந்த இராணுவத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும் அதில் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
யு.எல். 1205 ரக விமானம் அவர்களை அழைத்துவருவதற்கென இன்று காலை 7 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைத்தில் இருந்து புறப்பட்டதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார். மாணவர்களை ஏற்றிய குறித்த விமானம் இன்றிரவு 7.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடையவுள்ளது.