கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை 24 இலட்சத்தை எட்டியது
Related Articles
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை 24 இலட்சத்தை எட்டியுள்ளது. ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 501 பேர் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். 200 இற்கும் அதிகமான நாடுகள் வைரஸ் தொற்றினால் பாரிய பாதிப்புக்களை கொண்டுள்ளது. தற்போது அமெரிக்கா வைரஸ் தொற்றினால் அதிகளாவிலான பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளது. அங்கு, 42 ஆயிரத்து 514 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவை அடுத்து ஸ்பெயின், இத்தாலி, பிரோன்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் வைரஸ் தொற்றினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.