fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மக்களின் வாழ்க்கை நிலையை வழமைக்கு கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பான வழிகாட்டல்கள்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 19, 2020 12:48

மக்களின் வாழ்க்கை நிலையை வழமைக்கு கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பான வழிகாட்டல்கள்

மக்களின் வாழ்க்கை நிலையை வழமை நிலைக்கு கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பான வழிகாட்டல்கள் பல அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. அது தொடர்பான சுற்றுநிருபமும் அமைச்சுக்களின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்ப ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜெயசுந்தர நடவடிக்கை எடுத்துள்ளார். சேவை புரியும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கென பின்பற்றவேண்டிய சுகாதார பாதுகாப்பு முறைகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறித்த சுற்றுநிருபம் மூலம் அமைச்சுச் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேசச் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்கள், பொது முகாமையாளர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அலுவலகங்கள்; வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு உதவும் முகமாக, தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகளை படிப்படியானதொரு அடிப்படையில் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே, அத்தகைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் பகுதிகளில் பணிகளை மீள ஆரம்பிக்கும் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் பின்வரும் வழிகாட்டுநெறிகளை கடைப்பிடிக்கவேண்டும்:

வேலைத்தலத்தில் கொவிட்-19 ஐ தடுப்பதை உறதிசெய்வதற்குத் தேவையான அனைத்து சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அவசியமாகும்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் சமூக இடைவெளியைப் பேணுதல், முகக்கவசங்களை அணிதல், கை கழுவுதல் மற்றும் ஏனைய நடவடிக்ககைகள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.

அனைத்து வேலைத்தலங்களையும், குறிப்பாக பொது வெளியிடங்கள், கரும பீடங்கள், பணி அமைவிடங்கள், உணவறைகள், தேநீர் அறைககள், சிற்றுண்டிச்சாலைகள், கழிவறைகள் மற்றும் வேறு பகிரப்படும் வெளியிடங்கள் ஆகியவற்றை எப்போதும் சுத்தமானதும் சுகாதாரமானதுமாக பேணுதல் அவசியமாகும்.

பொது மக்கள் அடிக்கடி வருகைதரும் வேலைத்தலங்களில் கைகழுவுதல் கட்டாயமாகும். வேலைத்தலத்தில் பொருத்தமான இடங்களில் கையில் தடவும் செனிட்டைசிங் ஹேண்ட் ரப் டிஸ்பென்சர்கள் வசதிகளை வழங்கவேண்டும்.

பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரப் பராமரிப்பு மற்றும் துப்பரவு பற்றிய வழிகாட்டுநெறிகள் தொடர்பான தகவல்களை வழங்கும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கமான அறிவிப்புகளை தெளிவாகக் காட்சிப்படுத்தவும்.

வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்தல மற்றும் அலுவலக வளாக சுகாதார பராமரிப்பு பற்றிய வழிகாட்டுநெறிகள் நிர்மாணக் கருத்திட்டங்களின் அமுலாக்கத்தின்போது நிலைநாட்டப்படவேண்டும்.

வேலைத்தள கூட்டங்களை இன்றியமையாத பங்குபற்றுநர்கள் மாத்திரம் சமுகதமளித்திருக்கும் வண்ணம் முகாமைத்துவம் செய்யவும் அல்லது குறைந்த எண்ணிக்கையிலானோர் கலந்துகொள்ளும் வண்ணம் கூட்ட பங்குபற்றுநர் எண்ணிக்கயைக் குறைக்கவும்.
சாத்தியமானபோதெல்லாம் தொலைவிலிருந்து பணிபுரிதலையும் வேலைத்தலத்தில் ஆட்கள் நிரம்பியிருப்பதை முடிந்தவரை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலைகள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் வாழ்க்கைத்தொழில் கல்வி நிறுவனங்கள் ஆகியன மூடப்பட்டிருக்கும் நிலையிலும், தொலைக் கற்றல் முறைமை மற்றும் தொலைவிலிருந்து பணியாற்றும் ஏற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்ததது ஆகும்.

பெரும் ஒன்றுகூடலோடு எவ்வித மத செயற்பாடுகள் மற்றும் கூட்டங்கள் முதலியன ஏற்பாடு செய்யவதை தவிர்க்கவேண்டும்.

வேலையோடு தொடர்புபட்ட அத்தியாவசியமற்ற பயணங்களை நிறுத்திக் கொளவதோடு, இன்றியமையாத பயணங்களை மேற்கொள்ளவேண்டியுள்ள ஊழியர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் நிலவும் ஒழுங்குவிதிகளுக்கு ஏற்றவாறு செயற்படவேண்டும்.

கொவிட்-19 தொடர்பான ஆரம்ப அறிகுறிகளை கொண்டவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்கவேண்டுமென ஊழியர்களுக்கு அறிவுறத்தல் வழங்கவேண்டும்.

ஊழியர்கள் கட்டங்கட்டமாக வேலைக்குத் திரும்பவதற்கான பொறிமுறையொன்றைத் திட்டமிட்டு அமுல்படுத்த வேண்டும்.

ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பணியாளர்களோடு அரசாங்க அலுவலகங்கள் வழமையான அலுவலக பணிகளை மீள ஆரம்பிக்கவேண்டும். ஒவ்வொரு நிறுவனத் தலைவரும் இக்காலப்பகுதியில் வேலை முறைமை தொடர்பாக விசேட அறிவுறுத்தல்களை விடுக்கவேண்டும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்;டங்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பேரில் பாதிப்பு ஏற்படக்கூடுமென பிரகடனப்படுத்தப்பட்ட வேறு ஏதேனும் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உள்ள அரசாங்க அலுவலகங்கள் ஆரம்பத்தில் ஒரு சுழற்சி அடிப்படையில் 50 வீதம் ஊழியர்கள் வேலைக்கு சமுகமளிக்கும் வகையில் இயங்கவேண்டும். ஊழியர்களைத் தெரிவு செய்தல் ஊழியர் வகை, சேவைத் தேவைப்பாடு, திறன், வேலைத்தலத்திற்கு அண்மித்திருத்தல் போன்றதன் அடிப்படையில் ஊழியர்களை சேவைக்கு அமர்த்த உத்தேசிக்க வேண்டும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம் மாவட்டங்களிலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பேரில் பாதிப்புறத்தக்க மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட வேறு ஏதேனும் மாவட்டங்களிலும் உள்ள அரசாங்க அலுவலகங்கள் ஆரம்பத்தில் ஒரு சுழற்சி அடிப்படையல் 20 வீதம் ஊழியர்கள் வேலைக்கு சமுகமளிக்கும் வகையில் இயங்கவேண்டும்.
டிஜிட்டல் முறை மூலம் அரசாங்க சேவைகளை வழங்க படிப்பiடியாக மாறுகின்ற காலப்பகுதியில் இயன்றவரை குறுஞ் செய்தி பிரயோகம் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றைப் பயன்படுத்தல் மற்றும்வீட்டிலிருந்தே பணியாற்றுதல் மூலம் தொடர்ந்து வழமையானப் பணிகளை நிறைவேற்றுதல் என்பவற்றை முன்னெடுத்தல் சிறந்ததாகும்.

அனைத்து ஊழியர்களும் இக்காலப்பகுதியில் வீட்டுத் தோட்டம் செய்வதற்கு நேரத்தை ஒதுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது வீட்டு உணவுத் தேவைக்கும் குறைநிரப்புச் செய்யும் வகையில் அமைந்துள்ளதாக குறித்த சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 19, 2020 12:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க