fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 254ஆக அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 19, 2020 12:14

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது. வெலிசறை தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து குறித்த 6 பேரும் அடையாளம் காணப்பபட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். அதற்கமைய, நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 254 பேரில் தற்போது 161 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 86 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 07 பேர் மரணமடைந்துள்ளனர். இதேவேளை, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் அடிப்படையில் 103 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 19, 2020 12:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo