சீனாவினால் நன்கொடை செய்யப்பட்ட மேலும் 16 மெற்றிக் தொன் வைத்திய உபகரணங்கள் இலங்கைக்கு..
Related Articles
சீனாவினால் நன்கொடை செய்யப்பட்ட மேலும் 16 மெற்றிக் தொன் வைத்திய உபகரணங்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை ஏற்றிவந்த சீனாவின் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஆரு 231 விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை நேற்றைய தினம் வந்தடைந்தது. சீனாவின் ஷாங்ஹாய் நகரில் இருந்து வருகை தந்த குறித்த விமானத்தின் ஊடாக கொவிட் 19 நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான வைத்திய உபகரணங்கள் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.