fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் செயற்பாடு அடுத்த மாதம் முன்னெடுக்கப்படும் : நாசா

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 18, 2020 13:02

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் செயற்பாடு அடுத்த மாதம் முன்னெடுக்கப்படுமென நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்க மண்ணிலிருந்து 10 வருடங்களுக்கு பின்னர் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் பணியை மீண்டும் நாசா மேற்கொண்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே மாதம் 27ம் திகதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மத்திய நிலையத்திலிருந்து குறித்த ரொக்கட் விண்ணிற்கு ஏவப்படவுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடமையாற்றும் இரு விண்வெளி வீரர்கள் குறித்த ரொக்கட்டில் பயணம் செய்யவுள்ளதாக நாசா குறிப்பிட்டுள்ளது. ஸ்பேஸ் ஒ என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் இதற்கான விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 18, 2020 13:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க