தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த மேலும் 115 பேர் இன்றைய தினம் வீடு திரும்பவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடற்படை தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 9 பேரும் புனாணை தனிமைப்படுத்தல் மத்தியநிலையத்தில் இருந்த 115 பேரும் இவ்வாறு வெளியேவுள்ளனர். இந்நிலையில், இதுவரை 3 ஆயிரத்து 954 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்து வீடு திரும்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்தும் ஆயிரத்து 484 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், கண்டி – அக்குரணை, பேருவல – பன்னில, சீன குடா மற்றும் கிராண்பாஸ் ஆகிய பிரதேசங்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்மாடி குடியிருப்புகளில் இருக்கும் மக்களுக்கென பாதுகாப்பு பிரிவினரால் இன்றைய தினமும் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மக்களின் மன அழுத்தத்தை குறைப்பதே இதன் நோக்கமாகும்.