fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவல்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2020 16:59

சீனாவின் வுஹான் நகரம் கொரோனா வைரஸ் தொற்றியிலிருந்து மீண்ட நிலையில், அந்நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46 பேருக்கு கோரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சீன – ரஷ்ய எல்லையில் உள்ள சூபென்ஹே பகுதியில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறித்த நகரம் மற்றொரு வூஹானாக மாறி வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர். சீனாவில் இதுவரை மொத்தமாக 82 ஆயிரத்து 295 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 3 ஆயிரத்து 342 பேர் பலியாகியுள்ளனர். 77 ஆயிரத்து 892 பேர் குணமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2020 16:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo