fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2020 16:53

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 29ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வரக்காபொல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறி வகைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று, கொழும்பிலிருந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலை சம்பூர் பகுதியை நோக்கி நபர்களை அழைத்துச்சென்ற இரு பஸ்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2020 16:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo