நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கு அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகலாமென திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை
படிக்க 0 நிமிடங்கள்