fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அதிக பிடியெடுப்பாளர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் குசல் மென்டிஸ்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2020 14:49

இலங்கை அணி வீரர் குசல் மென்டிஸ் பிடியெடுப்பில் புதிய சாதனையொன்றை படைத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் அதிகளவான பிடியெடுப்புகளை மேற்கொண்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, குசல் மென்டிஸ் குறித்த தரபட்டியலில் 3ம் இடத்தைப் பெற்றுள்ளார். அவர், 85 பிடியெடுப்புகளை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். இதேவேளை, 95 பிடியெடுப்புகளுடன் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்தையும் 94 பிடியெடுப்புகளுடன் இங்கிலாந்து வீரர் ஜோர்வூட் 2ம் இடத்தையும் பெற்றுள்ளனர். இங்கிலாந்து வீரர் பென் ஸ்டொக்ஸ் 80 பிடியெடுப்புகளுடன் 4ம் இடத்திலும் தென்னப்ரிக்க வீரர் பெப் டு பிலஸிஸ் 70 பிடியெடுப்புகளுடன் 5 இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2020 14:49

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo