கொவிட் 19 வைரஸால் உலகில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை எட்டியுள்ளது. இதுவரை வைரஸ் தொற்றினால் 2,004,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 126,839 பேர் உயிரிழந்துள்ள நிலையில்485,827 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸால் அமெரிக்கா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் அந்நாட்டில் இரண்டாயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை 26 ஆயிரத்து 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6 இலட்சத்து 14 ஆயிரத்து 246 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு;ள்ளனர்.