யாழ்ப்பாணம், மணல்காடு கடற்பரப்பில் ஒரு தொகை கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில், போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பின் சறந்தேக நபர்களிடமிருந்து 133 கிலோ 57 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அதன் பெறுமதி சுமார் 2 கோடி ரூபா என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் பருத்திதுறை பகுதியை சேர்ந்த 22, 26 மற்றும் 37 வயதானவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில், பருத்திதுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.