அதிக அவதானமிக்க பகுதிகளான கொழும்பு, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளைய தினம் காலை 6 மணிக்கு நீக்கப்படவுள்ளது. அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மக்களின் நலன்கருதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட காலத்தில் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து பொறுமையுடன் செயற்படுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரியுள்ளது. ஊரடங்கு நீக்கப்படும் காலப்பகுதியில், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சில மாவட்டங்களில் ஊரடங்கு நாளை தற்காலிகமாக நீக்கம்
படிக்க 0 நிமிடங்கள்