fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் 19 : இத்தாலி மற்றும் பிரான்ஸில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஓரளவு வீழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 13, 2020 16:26

கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பதிவாகிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஓரளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி முதல் இத்தாலியில் வைரஸ் தொற்றாளர்களின் உயிரிழப்பு பதிவாக ஆரம்பித்தது. இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் இத்தாலியில் வைரஸ் தொற்றாளர்கள் 431 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வீழ்ச்சியை காட்டுவதாக இத்தாலி சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த நாட்களில் 24 மணித்தியாலங்களில் மாத்திரம் இத்தாலியில் 600க்கும் அதிகமான உயிரிழப்புகள் வைரஸ் தொற்றினால் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 13, 2020 16:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க