உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் கிறிஸ்து நாதர் உயிர்த்தெழுந்த நாளை நினைவு கூரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இலங்கையில் தேவாலயங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பேராயர் இல்ல ஆலயத்திலிருந்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் ஈஸ்டர் பண்டிகை திருப்பலி வேற்றப்பட்டது. இன்று காலை மக்கள் தொலைக்காட்சி ஊடாக இந்த திருப்பலியில் பங்குபற்றினர். உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் வேளையில் உலகில் அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன. வீட்டிலிருந்து மக்கள் தமது பக்தி முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கத்தோலிக்க திருச்சபை மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பேராயர் தலைமையில் உயிர்த்த ஞாயிறு சிறப்பு திருப்பலி
படிக்க 0 நிமிடங்கள்