புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தொலை கட்டுப்பாட்டால் செயல்படுகின்ற மெடிமேட்(Medimate) என்ற தானியங்கி சாதனயொன்று கடற்படை உருவாக்கியுள்ளது.
புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தொலை கட்டுப்பாட்டால் செயல்படுகின்ற மெடிமேட்(Medimate) தானியங்கி சாதனம் துஷார கெலும் வதசிங்க அவர்களின் அடிப்படை கருத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு, கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (Medimate) பிரிவு, கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பரிசோதிப்பதற்கும் ‘மெடி மேட்’ என்ற தொலை கட்டுப்பாட்டு சாதனமொன்றை உருவாக்கியது, கடற்படையின் ஆதரவின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த தானியங்கி சாதனம் தற்போது கலுபோவில போதனா மருத்துவமனை, நெவில் பெர்னாண்டோ போதனா மருத்துவமனை மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளன.