நாட்டில் இணங்கானப்பட்டுள்ள கொரோனா நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை 190 வரை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினரட தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் மற்றுமொரு கொரோனா நோய் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார். சிகிச்சைகளின் பின்னர் 49 பேர் பூரண குணமடைந்து வீடுகளுககு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் 134 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைகளை பெற்ற வருகின்றனர். இந் நிலையில் 242 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காமென சந்தேகத்தின் அடிப்படையில் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை 7 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பலியாகியுள்ளமை குறிப்படதக்கது.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்ககை 190..
படிக்க 0 நிமிடங்கள்