fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று பெரிய வெள்ளி தினத்தை நினைவு கூறுகின்றனர்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2020 12:38

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று பெரிய வெள்ளி தினத்தை நினைவு கூறுகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமாக பெரிய வெள்ளி வரலாற்றில் அடையாளப்படுத்தப்படுகின்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் தேவாராதனைகள் இடம்பெற்றாலும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெரும்பாலான நாடுகளில் ஆராதனைகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கi எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள தேவாலங்களில் இன்றைய தினம் தேவாராதனைகள் இடம்பெறமாட்டாது, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டிகை தலைமையில் விஷேட தேவ ஆராதனை ஒன்று பேராயர் இல்லத்தில் இருந்து இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தேவாராதனை சுயாதீன தொலைக்காட்சி ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக இலங்கை கத்தோலிக்க சபையின் ஊடக பேச்சாளர் லால் புஸ்பதேவ பெர்ணன்டோ தெரிவித்தார். இந் நிலையில் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை நினைவுக்கூறும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2020 12:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க