fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மருந்தகங்கள் உரிய முறையில் இயங்குகின்றனவா என்பது தொடர்பில் ஆராய அரசாங்கம் நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2020 18:07

மருந்தகங்கள் உரிய முறையில் இயங்குகின்றனவா என்பது தொடர்பில் ஆராய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மருந்தகங்களை திடீர் சோதனைக்குட்படுத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி விசேட படையணியின் தீர்மானத்திற்கு அமைய சகல மருந்தகங்களும் இன்றைய தினம் மு.ப 9 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை திறக்கப்பட்டன. இந்நிலையில் மருந்தகங்களை கண்காணிக்க தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மருந்துகளை கொள்வனவு செய்ய வரும் நபர்கள் மற்றும் மருந்தகங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதன்போது தெளிவுப்படுத்தப்பட்டதோடு கண்காணிப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றன. தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை மீறும் மருந்தகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு எதிர்காலத்தில் ஒழுங்கு முறைகளை பின்பற்றாத மருந்தகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் பிரதான உணவு மற்றும் மருந்து பரிசோதகர் அமித் பெரேரா தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2020 18:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க