fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆபத்தான மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு தற்காலிகமாக தளர்வு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2020 11:10

அபாய வளையமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணம், புத்தளம், கண்டி, யாழ்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரும் வரை அமுலில் இருக்குமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமையவே பாதுகாப்பு கருதி அங்கு ஊரடங்கு சட்டம் அமுல் படுத்ப்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய சகல மாவட்டங்களிளும் அமுல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டது. மீண்டும் மாலை 4.00 மணிக்கு இப்பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இம் மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 14 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும். அதே தினத்தில் மாலை 4.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீள அமுல் படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2020 11:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க